தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

Published On 2025-09-17 08:46 IST   |   Update On 2025-09-17 08:46:00 IST
  • அயராத அர்ப்பணிப்பு மற்றும் தேசத்திற்கான உறுதிபாடு தொடர்ந்து மில்லியன் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.
  • நமது மகத்தான தேசத்தை வழிநடத்த தொடர்ந்து பலம் கிடைக்க வாழ்த்துகிறேன்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

நமது மாண்புமிகு பிரதமருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் தொலைநோக்கு பார்வையுடைய தலைமை பண்பு, அயராத அர்ப்பணிப்பு மற்றும் தேசத்திற்கான உறுதிபாடு தொடர்ந்து மில்லியன் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.

உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மற்றும் நமது மகத்தான தேசத்தை வழிநடத்த தொடர்ந்து பலம் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News