தமிழ்நாடு செய்திகள்
தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் எடப்பாடி பழனிசாமி- துணை முதல்வர் உதயநிதி
- 10 நாட்களில் நெல் கொள்முதல் பணிகள் அனைத்தும் நிறைவடையும்.
- காவிரி படுமை மாவட்டங்களில் 2 லட்சம் நெல் மூட்டைகள் வைக்க இடவசி உள்ளது.
தஞ்சையில் நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்பும் பணியை துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறியதாவது:-
தஞ்சயைில் 200-ஆக இருந்த கொள்முதல் நிலையங்கள் 300 ஆக அதிகரித்துள்ளது. 10 நாட்களில் நெல் கொள்முதல் பணிகள் அனைத்தும் நிறைவடையும்.
வழக்கத்திற்கு மாறாக ஒரு மாதத்திற்கு முன்பே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
நெல் கொள்முதல் விவகாரத்தில் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. விவசாயிகள் யாரும் புகார் கூறவில்லை.
காவிரி படுகை மாவட்டங்களில் 2 லட்சம் நெல் மூட்டைகள் வைக்க இடவசி உள்ளது. அதனால், நெல் மூட்டைகள் நனையவோ, முளைக்கவோ இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.