தமிழ்நாடு செய்திகள்
போதைப்பொருள் வழக்கு - மேலும் 2 பேர் கைது
- காந்த், கிருஷ்ணா ஆகியோர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
- கைதானவர்களிடம் போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னை :
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள கெவினின் கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகியோரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.