தமிழ்நாடு செய்திகள்
ஓசி பயணம் என்று கூறி பெண்களை அசிங்கப்படுத்துகிறார்கள் - திமுகவை விமர்சித்த விஜய்
- இலவச பேருந்து பயணம் செல்லும் பெண்களை ஓசி பயணம் என அசிங்கப்படுத்துகிறார்கள்.
- பெண்கள் ஓசியில் பயணம் செகிறார்கள் என்று பொன்முடி பேசியது சர்ச்சையானது
திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது பேசிய விஜய், "இலவச பேருந்து பயணம் செல்லும் பெண்களை ஓசியில்தானே போகிறீர்கள், ஓசி பயணம் என அசிங்கப்படுத்துகிறார்கள். மகளிருக்கு ரூ.1,000 கொடுத்து விட்டு பணம் கொடுத்ததாக கூறி பெண்களை அசிங்கப்படுத்துகிறார்கள்" என்று திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
திமுகவில் அமைச்சராக இருந்த பொன்முடி, "பெண்கள் ஓசியில் பயணம் செகிறார்கள்" என்று பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.