அவன் அவன் ரோட்டுக்கு வந்து இஷ்டத்துக்கு பேசுறான்: விஜயை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர் ஆர். காந்தி
- தேர்தல் வந்தா போதும்ய்யா.. அவன் அவன் ரோட்ல வந்துடுறான். அவன் அவன் இஷ்டத்துக்கு பேசுறான்.
- நாங்கள் மட்டும் அவர்களுக்கு பதிலே பேசக் கூடாதாம்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழகத்தை தலை குனிய விடமாட்டோம் தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் டெக்ஸ்டைல்ஸ் துறை அமைச்சர் ஆர். காந்தி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் வந்தா போதும்ய்யா.. அவன் அவன் ரோட்ல வந்துடுறான். அவன் அவன் இஷ்டத்துக்கு பேசுறான். எங்களுக்கு கட்டளையிட்டுள்ளனர் தலைமையிலிருந்து. என்ன கட்டளை தெரியுமா? நாங்கள் எல்லாம் அமைச்சர்களாம். நாங்களும் அமைச்சர்கள். நீங்களும் அமைச்கர்கள்தான்.
நாங்கள் மட்டும் அவர்களுக்கு பதிலே பேசக் கூடாதாம். எங்களுக்கு நிஜமாக இந்த கட்டளை. நேற்று கூட வாட்ஸ்அப்பில் போட்டிருக்கிறார்கள். அவர்கள் எது வேண்டுமென்றாலும் பேசிக்கிட்டு போவார்கள். நாங்கள் எதுவும் பேசவில்லை. அது கூட கரெக்ட்தான். தெருவுல நாய் குலைக்குது, அது பின்னாடி நாம் போக முடியுமா? இல்ல.
என்னுடைய நெசவுத்துறையில் அரசு ஏராளமா செய்திருக்கிறது. யார் யாரோ வந்து என்னமும் பேசுங்கள். ஒன்னும் வேலைக்காகாது. யாரும் முதல்வரை தொட்டுக்கூட பார்க்க முடியாது.
இவ்வாறு அமைச்சர் ஆர். காந்தி பேசினார்.