தமிழ்நாடு செய்திகள்

அதானியை நான் சந்திக்கவில்லை- சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Published On 2024-12-10 11:56 IST   |   Update On 2024-12-10 11:56:00 IST
  • அதானி மீதான விசாரணையை பாமக, பாஜக ஆதரிக்குமா?
  • அதானி விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறார்.

சென்னை:

தமிழக சட்டசபையில் 2-ம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. அப்போது அதானி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

* தொழிலதிபர் அதானியை நான் சந்திக்கவில்லை.

* பாமக தலைவர் இந்த விவகாரத்தில் ஆழமாக பேசுகிறார். அதற்காக தான் இந்த அவையில் வைத்து விளக்கம் அளிக்கிறேன்.

* அதானி மீதான விசாரணையை பாமக, பாஜக ஆதரிக்குமா?

* தமிழ்நாட்டில் அதானி நிறுவன முதலீடு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

* அதானி விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறார்.

* அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

Similar News