தமிழ்நாடு செய்திகள்

'கூலி'யை ரசிக்கும் முதலமைச்சர் - இணையத்தில் கவனம் பெற்ற லோகேஷின் எக்ஸ் பதிவு

Published On 2025-08-14 11:23 IST   |   Update On 2025-08-14 11:23:00 IST
  • நேற்று கூலி படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து படக்குழுவினரை பாராட்டினார்.
  • இன்று உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று வெளியானது.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று வெளியானது. இதனிடையே நேற்று கூலி படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து படக்குழுவினரை பாராட்டினார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார், கூலி மீதான உங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

தனியார்மயத்தை எதிர்த்தும் கூலி குறைப்பை எதிர்த்தும் 13 நாட்களாக போராட்டம் நடத்திய தூய்மைப்பணியாளர்கள் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிலையில், கூலி குறித்த லோகேஷ் கனகராஜின் இந்த எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலானது.

தூய்மை பணி மேற்கொள்ளும் கூலி தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக போராடி கைது செய்யப்படும் நிலையில், கூலி படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்தது இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Tags:    

Similar News