குமரி அனந்தன் தமிழால் நம் நெஞ்சில் நிலைத்திருப்பார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- பாராளுமன்றத்தில் தமிழில் பேச உரிமை பெற்றுத்தந்தவர் குமரி அனந்தன்.
- தமிழே தன் மூச்சென தமிழ் திருப்பணி செய்த பெருவாழ்வை போற்றி தமிழக அரசு தகைசால் விருது வழங்கி பெருமை கொண்டது.
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், குமரி அனந்தன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான குமரிஅனந்தன் மறைவு செய்தி அறிந்து துயருற்றேன்.
பாராளுமன்றத்தில் தமிழில் பேச உரிமை பெற்றுத்தந்தவர் குமரி அனந்தன். தமிழே தன் மூச்சென தமிழ் திருப்பணி செய்த பெருவாழ்வை போற்றி தமிழக அரசு தகைசால் விருது வழங்கி பெருமை கொண்டது.
ஏராளமான நூல்கள், எண்ணற்ற மேடைகளை கண்ட குமரி அனந்தன் தமிழால் நம் நெஞ்சில் நிலைத்திருப்பார்.
குமரிஅனந்தன் மறைவால் வாடும் சகோதரி தமிழிசை உள்ளிட்ட குடும்பத்தினர், காங்கிரஸ் தொண்டர்கள், சொந்தங்களுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன்.