தமிழ்நாடு செய்திகள்

ஓ.பி.எஸ்.க்கு நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!

Published On 2025-07-31 19:05 IST   |   Update On 2025-07-31 19:05:00 IST
  • முதல்வர் உடனான சந்திப்பில் அரசியல் இல்லை என ஓ.பி.எஸ். தெரிவித்திருந்தார்.
  • உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி என முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவு.

முன்னாள் முதல்வரான ஓ. பன்னீர் செல்வம் இன்று காலை நடை பயிற்சியின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு சென்று முதல்வரை சந்தித்தார்.

ஆழ்வார்பேட்டைக்கு முதல்வர் வீட்டிற்குச் சென்ற ஓ.பி.எஸ்.-ஐ உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். ஓ.பி.எஸ். உடன் அவரது மூத்த மகன் ரவீந்திரநாத்தும் உடன் சென்றிருந்தார். இந்த சந்திப்பின்போது, முதலமைச்சர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ்., முதல்வர் உடனான சந்திப்பில் அரசியல் இல்லை எனத் தெரிவித்தார். இந்த நிலையில்தான் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் "உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி" என ஓ.பி.எஸ்.க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News