தமிழ்நாடு செய்திகள்

வடசென்னை மற்றும் திருவள்ளூரில் விஜயின் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்

Published On 2025-09-19 20:01 IST   |   Update On 2025-09-19 20:01:00 IST
  • நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
  • வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.

இந்நிலையில், தவெக பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, டிசம்பர் மாதம் 13ம் தேதியில் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தவெக பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தது.

மேலும், வரும் 27ம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், வரும் 27ம் தேதி அன்று சேலம் மற்றும் நாமக்கல்லில் பிரசாரம செய்ய உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News