தமிழ்நாடு செய்திகள்
மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்ய உள்ள மசோதாக்கள் - பரபரக்கும் சட்டசபை
- நேற்று வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகின.
- இன்றைய சட்டசபை நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாகவும், அது தொடர்பாக நேற்று வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகின.
இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ள மசோதாக்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில் மிகவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா சட்டசபையில் தாக்கல் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருமொழிக்கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இன்றைய சட்டசபை நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.