தமிழ்நாடு செய்திகள்

தரையில் பச்சிளங் குழந்தைகள்..! விளம்பரத்தில் மட்டும் கவனம் செலுத்தும் திமுக அரசு வெட்கப்பட வேண்டும்- நயினார் நாகேந்திரன்

Published On 2025-07-16 16:05 IST   |   Update On 2025-07-16 16:05:00 IST
  • பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டும் காணொளி மிகுந்த கவலையளிக்கிறது.
  • மருத்துவக் கட்டமைப்பு தான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பா?

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டும் காணொளி மிகுந்த கவலையளிக்கிறது.

பச்சிளம் குழந்தைகளைப் படுக்கவைக்கக்கூட வசதியில்லாத இந்த மருத்துவக் கட்டமைப்பு தான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பா? முறையான வசதிகள் ஏற்படுத்தித் தருவதை விட்டுவிட்டு விளம்பரத்தில் மட்டும் கவனம் செலுத்துவதற்கு

திமுக அரசு வெட்கப்பட வேண்டும்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News