தமிழ்நாடு செய்திகள்
சட்டமன்ற தேர்தல்: கூட்டணி குறித்து இபிஎஸ்- நயினார் நாளை முக்கிய ஆலோசனை
- நாளை காலை 9 மணிக்கு இபிஎஸ்-ஐ சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
- ஜனவரி 23ம் தேதி அன்று என்டிஏ கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவிப்பு.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை காலை ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் நாளை காலை 9 மணிக்கு இபிஎஸ்-ஐ சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஜனவரி 23ம் தேதி அன்று என்டிஏ கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.