தமிழ்நாடு செய்திகள்

வடமாநிலத்தவர் இங்க கேட் கீப்பர்: தமிழ் தெரிந்தவர்களை நியமனம் செய்யுங்க - பெற்றோர் வலியுறுத்தல்

Published On 2025-07-08 12:41 IST   |   Update On 2025-07-08 12:41:00 IST
  • ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
  • விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார்.

பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதுவதற்கு காரணமாக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ் மொழி தெரியாத வடமாநிலத்தை சேர்ந்தவர்களை இத்தகைய பணியில் அமர்த்துவது தான் இந்த விபத்துக்கு காரணம் என்று பெற்றோர் ஒருவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

கேட் கீப்பர் குறித்து பேசிய அவர், அந்த கேட் கீப்பர் மது அருந்திவிட்டு தூங்கிவிட்டார் என்று சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமன்றி அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் மொழி பிரச்னை இருந்துள்ளது. முதலில் உள்ளூர் மொழி தெரிந்தவர்களை இதுபோன்ற முக்கிய இடங்களில் பணியமர்த்துங்கள். ரெயில்வேயின் கவனக்குறைவுதான் இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கிய காரணம்" ஏன்னு ஆதங்கத்துடன் தெரிவித்தார். 

Tags:    

Similar News