தீரன் சின்னமலை வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்- அண்ணாமலை
- சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய, முதல் சுதந்திரப் போராட்ட வீரர்.
- வீரத்தின் அடையாளமாக விளங்கியவர்.
சென்னை:
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இளம் வயதிலேயே நாட்டுக்காக பெரும் படை திரட்டி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக இறுதி மூச்சு வரை போராடிய மாவீரன் தீரன் சின்னமலை அவர்கள் பிறந்த தினம் இன்று.
சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய, முதல் சுதந்திரப் போராட்ட வீரர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1801 ஆம் ஆண்டு, ஈரோடு காவிரிக் கரை போரிலும், 1802 ஆம் ஆண்டு ஓடாநிலை போரிலும், 1804 ஆம் ஆண்டு அரச்சலூர் போரிலும் பெரும் வெற்றி பெற்றவர். வீரத்தின் அடையாளமாக விளங்கியவர்.
தன் வாழ்நாளில் பெரும்பகுதியை போர்களில் செலவிட்டிருந்தாலும், சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் அவரின் ஆலயத் திருப்பணிகளுக்குச் சான்று.
தன்னுயிரைப் பற்றிக் கவலைப்படாது, நாட்டிற்காகப் போராடி உயிர்த் தியாகம் செய்த தீரன் சின்னமலை அவர்கள் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் என்று கூறியுள்ளார்.