தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. தலைவர் விஜய்யை பாராட்டி அண்ணா பேசும் AI வீடியோ- அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

Published On 2025-09-16 13:43 IST   |   Update On 2025-09-16 13:43:00 IST
  • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  • முதலமைச்சர் நாற்காலியை சாமானியன் அலங்கரித்தான் என்ற சாதனையை தொடங்கி வைத்த இந்த அண்ணாதுரை அன்று தலைமை தாங்க தம்பிகளை அழைத்தேன்.

சென்னை:

தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் அறிஞர் அண்ணா கொள்கைகளை பின்பற்றி அரசியல் பணிகளை செய்து வருகின்றன.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி த.வெ.க. தலைவர் விஜய்யை அண்ணா பாராட்டி பேசுவது போல் சிறப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில் கோடான கோடி உழைக்கும் மக்களின் உணர்வுமிக்க தம்பிகளின் பேராதரவை பெற்று தமிழ் மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியை சாமானியன் அலங்கரித்தான் என்ற சாதனையை தொடங்கி வைத்த இந்த அண்ணாதுரை அன்று தலைமை தாங்க தம்பிகளை அழைத்தேன்.

'இன்று தம்பி விஜய் உன்னை அழைக்கிறேன், தம்பி வா. தலைமை தாங்க வா' என்பது உள்பட விஜய்யை புகழ்ந்து பேசும் பல வசனங்களுடன் அண்ணா, பெரியாருடன் விஜய் இருப்பது போல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகி வெளியாகி உள்ள இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதுடன் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் உருவாக்கி உள்ளது.



Tags:    

Similar News