தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை நலிந்து போயுள்ளது- அன்புமணி ராமதாஸ்

Published On 2025-08-19 09:31 IST   |   Update On 2025-08-19 09:31:00 IST
  • சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் கொடுமை நடக்கிறது.
  • தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டுங்கள் என்று கூறி வருகிறோம்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நேற்று மாலை பா.ம.க. சார்பில் 'உரிமை மீட்க, தலைமுறை காக்க' நடைபயணம் நடந்தது. இதில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

இந்த நடைபயணத்தில் நோக்கம் தமிழக மக்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும். தி.மு.க. அரசை அகற்ற வேண்டும் என்பதுதான். தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை நலிந்து போயுள்ளது. போதை பழக்கம் அதிகரித்துள்ளது. இந்த ஆட்சியை அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இஸ்லாமியர், பட்டியலினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அனைவரையும் தி.மு.க. அரசு வஞ்சித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டும்.

சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் கொடுமை நடக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு பெற்றோரும் பயந்து போய் உள்ளனர். இன்று சாதாரணமாக கஞ்சா எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் காவல் துறையினருக்கு சுதந்திரம் இல்லை. இதனால் மக்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டுங்கள் என்று கூறி வருகிறோம். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். திராவிட மாடலுக்கு விடை கொடுப்போம்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Tags:    

Similar News