தமிழ்நாடு செய்திகள்
தி.மு.க.வின் ஊழலை பட்டியலிட்ட அமித் ஷா
- தமிழகத்தில் ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்சினையை திமுக கையில் எடுத்துள்ளது.
- மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பவே நீட் தேர்வு விவகாரத்தை திமுக பேசுகிறது.
திமுக ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், செய்தியாளர்கள் சந்திப்பின்போது திமுக மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்சினையை திமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பவே நீட் தேர்வு விவகாரத்தை திமுக பேசுகிறது.
திமுக ரூ.39 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது. ரூ.39,000 கோடி டாஸ்மாக் ஊழல் உள்ளிட்டவற்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி பதில் சொல்ல வேண்டும்.
இலவச வேட்டி வழங்குவதிலும் ஊழல், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திலும் ஊழல் செய்துள்ளது. மணல் ஊழல், எரிசக்தி ஊழல் என பல்வேறு ஊழல்களை திமுக செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.