செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் கடத்தல்- நடந்தது என்ன?
- கேமரா, மைக் ஆகியவற்றை பிடுங்கி வைத்துக்கொண்டு நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது.
- நிருபரை மீட்க சம்பவ இடத்திற்கு எஸ்.பி.ஜோஸ் தங்கையா அனுப்பி வைத்துள்ளார்.
கரூர் கிருஷ்ணராயபுரத்தில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது.
கடந்த 2022ம் ஆண்டு குவாரிக்கு ரூ.23.55 கோடி அளவுக்கு அபராதம் விதித்தும் கல்குவாரி செயல்பட்டு வருவதாகப் கூறப்பட்டது.
இதைதொடர்ந்து, புகார் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற திருச்சி செய்தியாளர் கதிரவனை சுற்றிவளைத்து கனிமவளக் கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
கேமரா, மைக் ஆகியவற்றை பிடுங்கி வைத்துக்கொண்டு நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது.
கரூர் கிருஷ்ணராயபுரம் பகுதியில் குவாரியில் இருந்து நிருபர், ஒளிப்பதிவாளர் கடத்தப்பட்டு ஒரு மணி நேரம் கடந்த நிலையில், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்தனர்.
திமுக எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்ட கும்பல் நிருபர், ஒளிப்பதிவாளர், வழக்கறிஞர் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவ இடத்தில் திமுக எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்ட 50 பேர் நிருபர் உள்ளிட்ட 4 பேர் மீதும் கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
4 பேரையும் கும்பல் கடத்திய நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கடந்தும் யாரையும் தொடர் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதுதொடர்பாக தகவல் அறிந்த நிலையில், நிருபரை மீட்க டிஎஸ்பி தலைமையிலான காவல் படையை சம்பவ இடத்திற்கு எஸ்.பி.ஜோஸ் தங்கையா அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வௌியானது.
இந்நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் உள்ளிட்ட 4 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.