தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வை எதிர்க்க த.வெ.க. உள்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்- நயினார் நாகேந்திரன்

Published On 2025-05-28 15:08 IST   |   Update On 2025-05-28 15:08:00 IST
  • தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேரவேண்டும்.
  • கூட்டணியை பொறுத்தவரையில் சட்டமன்ற தேர்தலில் எண்ணிக்கை என்பது முக்கியமல்ல, எண்ணம்தான் முக்கியம்.

மதுரையில் இன்று நடைபெற்ற முருகபக்தர்கள் மாநாட்டுக்கான கால்கோள் விழாவில் கலந்துகொண்ட தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. குறித்து பல்வேறு விமர்சனங்களை த.வெ.க. தலைவர் விஜய் வைத்திருந்தார். என்னுடைய சிந்தனையில் தி.மு.க. அரசு அகற்றப்பட வேண்டும், அதற்கான தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேரவேண்டும்.

கருத்துவேறுபாடுகள், விமர்சனங்கள் வெவ்வேறாக இருக்கலாம். உங்கள் கருத்து ஒன்றாக இருக்கும், எங்கள் கருத்து ஒன்றாக இருக்கும்.

ஆனால் தி.மு.க. அரசு அகற்றப்பட ஒருமித்த கருத்து உருவாக வேண்டும். எனவே ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும். அந்த அடிப்படையில்தான் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, விஜய்யை கூட்டணிக்கு அழைத்துள் ளார். அதனை நாங்கள் வரவேற்கிறோம்.

தி.மு.க.வை எதிர்க்க அனைத்து கட்சிகளும் த.வெ.க. உள்பட அனைரும் ஒன்றிணைய வேண்டும்.

கூட்டணியை பொறுத்தவரையில் சட்டமன்ற தேர்தலில் எண்ணிக்கை என்பது முக்கியமல்ல, எண்ணம்தான் முக்கியம்.

தமிழகம் முழுவதும் விரைவில் வேல் யாத்திரை, அண்ணாமலை நடைபயணம் போல சட்டமன்ற உறுப்பினர்களுடன் யாத்திரை மேற்கொள்ள இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News