தமிழ்நாடு செய்திகள்
அ.தி.மு.க.-வின் "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" பிரசாரம் ரத்து
- நாளை 2 இடங்களில் நடைபெற இருந்த இபிஎஸ் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- பிரசாரம் நடைபெறுவதற்கு ஒருநாளே இருக்கும் நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை 2 இடங்களில் நடைபெற இருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, குமாரபாளையம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் நாளை நடைபெறவிருந்த எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு அதிமுகவினர் தேர்வு செய்த இடங்கள் நெடுஞ்சாலை பகுதியாக இருப்பதால் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
பிரசாரம் நடைபெறுவதற்கு ஒருநாளே இருக்கும் நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மேகுமாரபாளையம், திருச்செங்கோடு தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.