தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி என்பது மக்களின் விருப்பம்- நயினார் நாகேந்திரன்

Published On 2025-04-12 15:10 IST   |   Update On 2025-04-12 15:10:00 IST
  • 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
  • முதலமைச்சர் விமர்சனம் செய்ய வேண்டியது ஆ.ராசாவையும், பொன்முடியையும் தான்.

தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணியுடன் போட்டியிட உள்ளதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

இந்நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்படவுள்ள நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

அதிமுக- பாஜக கூட்டணி மக்களின் விருப்பம். மக்கள் யாரை ஏற்கிறார்கள் என்பது தேர்தலில் தெரியும், திமுக தோல்வி பயத்தில் இருக்கிறார்கள்.

திமுக அரசு செய்துள்ள ஊழல்கள் தொடர்பான ஆவணங்கள் பொதுமக்கள் மத்தியில் வெளியிடப்படும். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்.

முதலமைச்சர் விமர்சனம் செய்ய வேண்டியது ஆ.ராசாவையும், பொன்முடியையும் தான்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News