தமிழ்நாடு செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்

Published On 2025-12-10 11:10 IST   |   Update On 2025-12-10 11:10:00 IST
  • முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
  • நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

சென்னையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தொடங்கியது.

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து தற்காலிக அவைத்தலைவராக கே.பி.முனுசாமி அ.தி.மு.க. பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்மகன் உசேன் உடல்நலக்குறைவால் பங்கேற்காததால் தற்காலிக அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவிற்கே சவால் விடுவதா? என தி.மு.க. அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

* மேல்முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றம்.

* நீதித்துறையின் தனித்தன்மை காக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News