தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி விபத்தில் உயிரிழப்பு

Published On 2025-05-23 00:02 IST   |   Update On 2025-05-23 00:02:00 IST
  • கல்லாறு முதல் வளைவு அருகே வந்த போது கார் பிரேக் பிடிக்காமல் மரத்தில் மோதி கவிழ்ந்தது.
  • திவ்ய பிரியா மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

கோவை:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள்வழி பேத்தி திவ்ய பிரியா(28). திவ்ய பிரியா மதுரையில் பல் மருத்துவராக உள்ளார். இவர், அவரது கணவர் கார்த்திக் ராஜா, உறவினர்கள் வளர்மதி (48), பரமேஸ்வரி (44) உள்ளிட்டோருடன் நீலகிரிக்கு சுற்றுலா சென்றார். இன்று மாலை காரில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை சென்றனர்.

பார்த்திபன் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார்.. மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு முதல் வளைவு அருகே வந்தபோது கார் பிரேக் பிடிக்காமல் மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் திவ்ய பிரியா, பரமேஸ்வரி ஆகியோருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. வளர்மதிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திவ்ய பிரியா மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். காயமடைந்த மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News