தமிழ்நாடு செய்திகள்
தாம்பரம்- மதுரை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
- மதுரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் வரும் டிசம்பர் 27-ந்தேதி வரையில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
- டிசம்பர் 28-ந்தேதி வரையில் 4 பெட்டிகள் தற்காலிகமாக இணைத்து இயக்கப்பட உள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மதுரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்.22624), இன்று (வியாழக்கிழமை) முதல் வரும் டிசம்பர் 27-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22623), நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வரும் டிசம்பர் 28-ந்தேதி வரையிலும் கூடுதலாக 3-வது வகுப்பு ஏ.சி. எக்கனாமிக் பெட்டி-3, படுக்கை வசதி பெட்டி-1 என மொத்தம் 4 பெட்டிகள் தற்காலிகமாக இணைத்து இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.