தமிழ்நாடு செய்திகள்
சலுகை விலையில் விற்பனை என விளம்பரம் - துணிகள் தரமற்று இருந்ததால் மக்கள் வாக்குவாதம்
- விளம்பரத்தால் எண்ணற்ற மக்கள் துணிகளை வாங்க குவிந்தனர்.
- தரமற்ற துணிகளே இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே வரி அதிகரிப்பால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத ஜவுளி ரகங்கள் சலுகை விலையில் விற்பனை என விளம்பரம் செய்யப்பட்டு துணிகள் வீரப்பனை செய்யப்பட்டது.
இந்த விளம்பரத்தால் எண்ணற்ற மக்கள் துணிகளை வாங்க குவிந்தனர். ஏராளமான மக்கள் குவிந்த நிலையில் தரமற்ற துணிகளே இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
உள்ளூர் சந்தையில் விற்கப்படுவதை ஏற்றுமதி துணிகள் என ஏமாற்றுவதாக மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட துணிகள் விற்பனை நிறுத்தப்பப்பட்டது.