தமிழ்நாடு செய்திகள்

தவறு செய்துவிட்டேன்... போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த்

Published On 2025-06-24 12:07 IST   |   Update On 2025-06-24 12:07:00 IST
  • நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு வருகிற 7-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
  • தனது மகனை கவனித்துக்கொள்வதற்காக தனக்கு ஜாமின் வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நேற்று நடிகர் ஸ்ரீகாந்த் கைதானார். இச்சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதலில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என கூறிய ஸ்ரீகாந்த் பின்னர் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதனை தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 8 கொக்கைன் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு வருகிற 7-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த் தவறு செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் உருக்கமாக பேசியுள்ளார். மேலும் தனது மகனை கவனித்துக்கொள்வதற்காக தனக்கு ஜாமின் வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, சிறையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு முதல் வகுப்பு வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்தது ஏன்? என்ன பலரும் கேள்வி எழுப்பினர். வருமான வரி முறையாக செலுத்திவரும் நபர் என்பதால் சிறையில் முதல் வகுப்பு சலுகை ஸ்ரீகாந்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News