தமிழ்நாடு செய்திகள்
தனியார் பள்ளி மாடியில் இருந்து விழுந்த மாணவி.. கால்கள் செயல் இழந்து விட்டதாக கதறும் பெற்றோர்
- கரூரில் 13 வயது சிறுமி பள்ளி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
- இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 13 வயது சிறுமி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராயனூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் கண்ணாவின் மகள் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இன்று வழக்கம் போல் பள்ளி சென்ற மாணவி 2வது தளத்தில் இருந்து விழுந்து விட்டதாக பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கால்கள் செயல்படாமல் போய் விட்டதாக அவரது பெற்றோர் கண்ணீர்விட்டு கதறி அழுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.