தமிழ்நாடு செய்திகள்
சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த பைக்.. பட்டினம்பாக்கத்தில் பரபரப்பு
- அடுத்த சில நிமிடங்களிலேயே பைக் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பட்டினப்பாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பைக்கில் இருந்து திடீரென புகை கிளம்பியது.
இதைப் பார்த்த பைக்கை ஓட்டி வந்த நபர் சுதாரித்துக்கொண்டு, உடனடியாக பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு தூரமாக சென்றார். அடுத்த சில நிமிடங்களிலேயே பைக் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து, வாகனத்தை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த நிகழ்வால் பட்டினப்பாக்கம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.