null
த.வெ.க. மாநாட்டிற்கு சென்ற 3 தொண்டர்கள் உயிரிழப்பு - விஜய் இரங்கல்
- த.வெ.க. மாநாட்டிற்கு சென்ற 3 தொண்டர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- உயிரிழந்த 3 தொண்டர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
த.வெ.க. மாநாட்டிற்கு சென்ற 3 தொண்டர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்த 3 தொண்டர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "நம் மீது தீராப் பற்று கொண்ட கழகத் தோழர்கள் செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதிக் கழக நிர்வாகி திரு. R.பிரபாகரன், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கேம்ப் லைன் திரு. K.ரித்திக் ரோஷன், விருதுநகர் மாவட்டம், இனாம் கரிசல்குளம் கிளைக் கழக நிர்வாகி திரு. K. காளிராஜ் ஆகியோர் மதுரையில் நடைபெற்ற மாநாட்டிற்கு முன்பும் பின்பும் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
நம் கழகத்திற்கான இவர்களது பற்றுறுதியும் பங்களிப்பும் என்றென்றும் நம் நினைவில் நிற்கும். அவர்கள் விரும்பிய இலட்சிய சமுதாயத்தை நாம் படைத்துக் காட்டுவோம். கழகத் தோழர்களைப் பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காலமான கழகத் தோழர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். அவர்களின் குடும்பங்களுக்கு நம் கழகம் உறுதுணையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.