தமிழ்நாடு செய்திகள்
விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
- சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
- 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தொட்டிக்குள் இறங்கிய 5 பேர் விஷவாயு தாக்கி மயக்கடைந்தனர்.
5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க சாயா ஆலை நிறுவனம் ஒப்புதல் கொடுத்துள்ளது.
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க ஆலை நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.