தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க.வில் இணைகிறார் விஜயதாரணி?

Published On 2024-02-13 20:07 IST   |   Update On 2024-02-13 20:18:00 IST
  • விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி அக்கட்சித் தலைமை மீது அதிருப்தியில் உள்ளார்.
  • இதன் காரணமாக அவர் விரைவில் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை:

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபைத் தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக விஜயதாரணி இருந்து வருகிறார்.

சமீப காலமாக கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக தீவிர அரசியிலில் ஒதுங்கி இருந்து வரும் அவர், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இந்த முறை தனக்கு சீட்டு வழங்கவேண்டும் என கோரியுள்ளார்.

ஆனால் தி.மு.க. கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படுமா, அப்படியே வழங்கினாலும் விஜயதாரணிக்கு அந்த சீட்டு வழங்கப்படுமா என்பது சந்தேகமே.

இந்நிலையில், காங்கிரஸ் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விஜயதாரணி எம்.எல்.ஏ. விரைவில் பா.ஜ.க.வில் இணைய உள்ளார் என தகவல் பரவி வருகிறது.

Tags:    

Similar News