தமிழ்நாடு செய்திகள்
38 மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம்
- சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
- வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வளத்துறை சார்பில் 38 மாவட்டங்களுக்கு அதிகாரிகளை நியமனம்.
சென்னை:
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வளத்துறை சார்பில் 38 மாவட்டங்களுக்கு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
செயற்பொறியாளர் நிலையில் 38 பொறியாளர்களை மாவட்ட ஒருங்கிணைப்பு அலவலராக நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.