தமிழ்நாடு செய்திகள்

டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்கிறார் விஜய பிரபாகரன்

Published On 2024-06-12 10:11 IST   |   Update On 2024-06-12 10:39:00 IST
  • விஜய பிரபாகரன் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
  • தேர்தல் ஆணையத்திற்கு இ-மெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பிரேமலதா தெரிவித்து இருந்தார்.

சென்னை:

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

இதனை தொடர்ந்து கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகவும் இதனால் ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு இ-மெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், விருதுநகரில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்கிறார்.

டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் ஆணையரை சந்திக்கும் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News