தமிழ்நாடு செய்திகள்

டாஸ்மாக் கடையில் பல லட்சம் மதுபானங்கள் கொள்ளை

Published On 2023-06-19 10:34 IST   |   Update On 2023-06-19 10:34:00 IST
  • பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை திருடி சென்று விட்டனர்.
  • பக்கத்து கடையில் இருந்த 10 அரிசி மூட்டைகளை தூக்கி சென்று விட்டனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த கருந்துவாம்பாடி கூட்ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் தினந்தோறும் லட்சக்கணக்கில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்களும் கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு டாஸ்மாக் அருேக உள்ள கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்து டாஸ்மாக் கடை சுவற்றில் துளை போட முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை முன்பு போடப்பட்டிருந்த இரும்பு கேட்டை உடைத்து எடுத்துவிட்டு பின்பு இரும்பு ஷட்டரையும் உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை திருடி சென்று விட்டனர்.

மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாளில் விற்பனை செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தன.

அதனையும் திருடி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் பக்கத்து கடையில் இருந்த 10 அரிசி மூட்டைகளை தூக்கி சென்று விட்டனர்.

அந்த பகுதியில் மேலும் 2 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

இன்று காலையில் கொள்ளை சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதா என்று விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News