தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.-வுக்கு ஆதரவு, ஆனால் ஒரு கண்டிஷன் - சீமான் அதிரடி

Published On 2023-09-03 19:01 IST   |   Update On 2023-09-03 19:01:00 IST
  • நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான், தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவிப்பு.
  • தி.மு.க. வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை நிறுத்தாது என்றும் சீமான் தகவல்.

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கட்சி இவ்வாறு செய்தால், நிச்சயமாக நான் தி.மு.க.வுக்குத் தான் ஆதரவு கொடுப்பேன் என்று தெரவித்து இருக்கிறார்.

"2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் போட்டியிடுவதாக கூறுப்படுகிறது. ஒருவேளை ராமேஸ்வரம் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டால், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். பிரதமர் மோடியை எதிர்த்து, தி.மு.க. உதயசூரியன் சின்னத்தில் ஒரு வேட்பாளரை நிறுத்தினால், இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது."

"பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவிக்கும். இதில் எந்த மாற்றமும் கிடையாது. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுடன் எங்களுக்கு இருப்பது பங்காளி சண்டை மட்டும் தான்."

"பா.ஜ.க. வெறுப்பு அரசியலை பேசி வருகிறது. எப்போதும் இஸ்லாமியர், கிறிஸ்தவரை மட்டுமே எதிர்த்து பேசுவது என்பது விருப்ப அரசியலா? வெறுப்பு அரசியல் தானே. நான் வெறுப்பு அரசியலை பேசுகிறவன் அல்ல. தேசிய இனத்தின் உரிமைக்காக, தெளிவான புரிதலோடு நிற்பவன்," என்று சீமான் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News