தமிழ்நாடு செய்திகள்
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் ஆனார் பிரேமலதா விஜயகாந்த்
- மருத்துவ சிகிச்சைக்கு பின் முதன் முறையாக கட்சி நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்றார்.
- விஜயகாந்தை பார்த்ததும் தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
சென்னை :
தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டில் இன்று நடைபெற்றது. மருத்துவ சிகிச்சைக்கு பின் முதன் முறையாக கட்சி நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்றார். விஜயகாந்தை பார்த்ததும் தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் பார்த்தசாரதி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பொதுக்குழுவில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டார்.அதேநேரம், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜயகாந்திற்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.