தமிழ்நாடு

என் காதல் சாதாரணமானது அல்ல; அதையும் தாண்டி புனிதமானது- கமல்ஹாசன்

Published On 2024-04-03 08:28 GMT   |   Update On 2024-04-03 08:28 GMT
  • தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்கும்.
  • எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இல்லாமல் செய்வது ஒருவித அரசியல்.

திருச்சி:

திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது கமல்ஹாசன் பேசியதாவது:-

நாம் மதிக்கும் மிக முக்கியமான புத்தகம், நம் அரசியல் அமைப்பு சட்டம். அந்த புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான் நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் பாதுகாக்கப்படும். நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்து இருக்கிறேன்.

தமிழக மக்களுக்கும், இந்தியாவுக்கும் எனக்குள்ள காதல் சாதாரணமானது அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. என் காதல் உங்கள் அனைவரின்பால் உண்டு. அதனால் தான் நான் அரசியலுக்கே வந்தேன்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்கும். இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை என்பதை முதன்முதலில் மக்கள் நீதி மய்யத்தில் அறிவித்தோம். அப்போது என்னென்னமோ கிண்டல் செய்தார்கள்.

ஆனால் அதை உற்றுநோக்கி நடைமுறைப்படுத்திய ஒரு காரணத்துக்காக நான் இங்கு வந்தேன் என்று வைத்து கொள்ளலாம். பெண்களுக்கு பஸ்சில் கட்டணமில்லா பயணம் என்ற திட்டம் ஏன் தமிழ்நாட்டோடு முடியணும்? இந்தியா முழுவதும் ஏன்? வரக்கூடாது. அது தான் நல்ல அரசியல், அதை செய்யுங்கள்.

எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இல்லாமல் செய்வது ஒருவித அரசியல். எதிர்த்து குரல் கொடுத்தாலும் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பது நமது அரசியல். அண்ணன், தம்பிகளை மோதவிட்டு பார்ப்பது ஒரு அரசியல் தந்திரம். அது இன்று நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News