தமிழ்நாடு

ஓ.பி.எஸ்.சுக்கு வணக்கம் போட்டு ஈ.பி.எஸ்.சிடம் வாங்கி கட்டினார்!

Update: 2023-06-03 08:12 GMT
  • போனோமா... வந்தோமோ... என்று இருக்காமல் வாங்கி கட்டிக்கொண்டார் பெஞ்சமின்.
  • எடப்பாடி பழனிசாமியே வணக்கம் போட்டதற்கு சமமானது என்று நிர்வாகிகள் எடப்பாடி காதில் போட வாங்கி கட்டி இருக்கிறார் பெஞ்சமின்.

ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள இயலாததால் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, பெஞ்சமின் ஆகியோரை கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைத்திருந்தார். போனோமா... வந்தோமோ... என்று இருக்காமல் வாங்கி கட்டிக்கொண்டார் பெஞ்சமின்.

அந்த நிகழ்ச்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்த போது ரொம்ப பவ்யமாக எழுந்து நின்று வணக்கம் போட்டார் பெஞ்சமின். அருகில் இருந்த சீனியரான பா.வளர்மதி அவரது சட்டையை பிடித்து இழுத்து உட்கார சொல்லியும் கேட்காமல் எழுந்து நின்று வணங்கி தனது மரியாதையை காட்டினார்.

ஆனால் இது எடப்பாடி பழனிசாமியே வணக்கம் போட்டதற்கு சமமானது என்று நிர்வாகிகள் எடப்பாடி காதில் போட வாங்கி கட்டி இருக்கிறார் பெஞ்சமின்.

Tags:    

Similar News