தமிழ்நாடு செய்திகள்

வைகுண்ட ஏகாதசி.. பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு!

Published On 2025-12-30 04:55 IST   |   Update On 2025-12-30 04:55:00 IST
  • மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
  • இந்த நாளில் வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருப்பதாக ஐதீகம்.

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

இந்த நாளின் மிக முக்கியமான நிகழ்வு விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு ஆகும்.

இந்த நாளில் வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருப்பதாகவும் அதன் வழியே சென்றால் மறுபிறவி இருக்காது என்பதும் நம்பிக்கை.

அதன்படி இன்று (டிசம்பர் 30), அதிகாலை பெருமாள் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட முக்கிய பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வாசல் வழியாக கடந்து சென்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News