தமிழ்நாடு செய்திகள்

சாத்தூர் அருகே கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்றவர் கைது

Published On 2023-06-18 11:57 IST   |   Update On 2023-06-18 11:57:00 IST
  • தன்னை பிரிந்து சென்றதால் ராஜேஸ்வரி மீது பரமசிவத்துக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
  • ரங்கப்பநாயக்கன்பட்டி கண்மாயில் பகுதியில் பதுங்கி இருந்த பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர்.

தாயில்பட்டி:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்துப்பாண்டி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி ராஜேஸ்வரி தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்கு பதிந்து அவரை கொன்றது யார்? என்று விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின.

சாத்தூர் அருகே உள்ள சங்கரநத்தம் கிராமத்தை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி பரமசிவம் (51). விறகு விற்க வந்தபோது இவருக்கும், ராஜேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி உள்ளது.

இந்நிலையில் ராஜேஸ்வரி கணவரை பிரிந்து பரமசிவத்துடன் சென்று விட்டார். அவருடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜேஸ்வரி தனது கணவர் வீட்டுக்கே வந்து விட்டதாக தெரிகிறது.

தன்னை பிரிந்து சென்றதால் ராஜேஸ்வரி மீது பரமசிவத்துக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அந்த ஆத்திரத்திலேயே சம்பவத்தன்று ராஜேஸ்வரியை கழுத்து அறுத்து கொன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பரமசிவம் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தலைமறைவாக இருந்த அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ரங்கப்பநாயக்கன்பட்டி கண்மாயில் பகுதியில் பதுங்கி இருந்த பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர். ராஜேஸ்வரியை கொலை செய்து விட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த பரமசிவத்தை 18 நாட்களுக்கு பிறகு போலீசார் இன்று கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News