தமிழ்நாடு செய்திகள்

விஜய் கனவு வெல்ல வாழ்த்துக்கள்: சீமான்

Published On 2023-11-02 15:52 IST   |   Update On 2023-11-02 15:53:00 IST
  • தம்பி விஜய் அரசியலுக்கு முதலில் வரட்டும். அவரது கொள்கைகளை கூறட்டும்.
  • விஜயகாந்த் வலுவாக வந்தார். மாற்றம் என்று கூறியவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததால் பின்னடைவை சந்தித்தார்.

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் விஜய் அரசியலுக்கு வர தயாராவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து சீமான் கூறியதாவது:-

தம்பி விஜய் அரசியலுக்கு முதலில் வரட்டும். அவரது கொள்கைகளை கூறட்டும். எம்.ஜி.ஆரே அரசியலுக்கு வருவதற்கு முதலில் தயங்கினார். ஜெயலலிதா புதிதாக கட்சி தொடங்கி இருந்தால் வென்றிருப்பாரா என்பது தெரியாது. விஜயகாந்த் வலுவாக வந்தார். மாற்றம் என்று கூறியவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததால் பின்னடைவை சந்தித்தார்.

சிரஞ்சீவி, பவன் கல்யாண் போன்றவர்களாலும் வெல்ல முடியவில்லை. எனவே விஜய் அரசியலுக்கு வந்தால் நின்று சண்டை போடவேண்டும். விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவோம். விஜய் கனவு வெல்ல எனது வாழ்த்துக்கள். கட்சி தொடங்கி உடனே வென்றால் அது புரட்சிதான்.

இவ்வாறு சீமான் கூறினார்.

Tags:    

Similar News