தமிழ்நாடு

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களையும், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதையும் படத்தில் காணலாம்.

பணி நீக்கத்தை கண்டித்து பல்லடத்தில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்

Published On 2023-06-16 04:22 GMT   |   Update On 2023-06-16 04:22 GMT
  • பணி நியமனம் செய்யக்கோரி 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • கொரோனா காலங்களில் உயிரை பணயம் வைத்து குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தோம்

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் பணியாற்றி வரும் தற்காலிக துப்புரவு பணியாளர்களில் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களை பணி நீக்கம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், மீண்டும் அவர்களை பணி நியமனம் செய்யக்கோரி 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று காலை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தை கை விடுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சுமூக முடிவு ஏற்படாததால் தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தற்காலிக தூய்மை பணியாளர்கள் கூறுகையில்,

கொரோனா காலங்களில் உயிரை பணயம் வைத்து குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தோம். தற்போது திடீரென ஆட்குறைப்பு என்ற பெயரில் எங்களை வேலைக்கு வர வேண்டாம் என சொன்னால் எங்களின் குடும்பம் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எனவே தூய்மைப் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கக்கூடாது. தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என்றனர். இதையடுத்து அவர்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தூய்மைபணியாளர்கள் ஸ்டிரைக் காரணமாக பல்லடம் நகராட்சி பகுதியில் இன்று காலை குப்பைகள் அகற்றும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடந்தது.

Tags:    

Similar News