தமிழ்நாடு செய்திகள்

ராகுல் காந்தி 12-ந்தேதி தமிழகம் வருகிறார்

Published On 2024-04-03 13:53 IST   |   Update On 2024-04-03 13:53:00 IST
  • கோவையில் பிரசாரம் செய்து தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
  • கேரள மாநிலம் வயநாட்டில் அவர் போட்டியிடும் பகுதியில் பிரசாரம் செய்ய செல்கிறார்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

இதனால் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. கூட்டணி கட்சியினருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வடமாநில தலைவர்களும் வருகிறார்கள்.

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வர வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டன.

அன்று ஒரே நாளில் 2 இடங்களில் பிரசாரம் செய்யும் வகையில் பயணத்திட்டம் தயாராகிறது.

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளர், தூத்துக்குடி, தென்காசி தி.மு.க. வேட்பாளர்கள், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து நெல்லையில் பிரசார பொதுக்கூட்டத்தில் ஆதரவு திரட்டுகிறார்.

அதைத் தொடர்ந்து கோவையில் பிரசாரம் செய்து தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

பின்னர் அங்கிருந்து கேரள மாநிலம் வயநாட்டில் அவர் போட்டியிடும் பகுதியில் பிரசாரம் செய்ய செல்கிறார்.

Tags:    

Similar News