தமிழ்நாடு செய்திகள்
அண்ணாமலை,சிவசங்கர்(கோப்பு படம்)
எவ்வளவு உருண்டு புரண்டாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள்- அண்ணாமலையை விமர்சித்த அமைச்சர்
- விளம்பர மோகம் இல்லாமல் மக்களுக்கு முதலமைச்சர் பணியாற்றி வருகிறார்.
- அண்ணாமலையையும், பாஜகவையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் அரசு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:
எந்த விளம்பர மோகமும் இல்லாமல் மக்களுக்கு பணியாற்றி வருபவர் நமது முதலமைச்சர். எதை செய்தாலும் எதை பேசினாலும் மக்கள் தன் பக்கம் திரும்பி பார்க்க மாட்டேன் என்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.
எவ்வளவு உருண்டு புரண்டாலும் தமிழக மக்கள் அண்ணாமலையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவருடைய கட்சியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதுதான் நிதர்சனமான உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.