தமிழ்நாடு செய்திகள்

பொங்கலுக்கு பிறகு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-01-13 17:54 IST   |   Update On 2024-01-13 18:09:00 IST
  • இந்தியா கூட்டணி தலைவர்கள் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  • தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.

சென்னை:

இந்தியா கூட்டணி தலைவர்கள் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் கார்கே பங்கேற்றார். சிவசேனா, சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம், கம்யூனிஸ்டு தலைவர்களும் கலந்துகொண்டனர்.

தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். இதற்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் காணொலி காட்சியில் மற்ற தலைவர்களுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News