தமிழ்நாடு செய்திகள்

லைவ் அப்டேட்ஸ்: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்

Published On 2023-03-21 10:03 IST   |   Update On 2023-03-21 12:48:00 IST
2023-03-21 05:24 GMT

வேளாண்மை தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.

சம்பா நெல் அறுவடைக்கு பின் சிறுதானியங்கள், பயறு உள்ளிட்ட சாகுபடிக்கு ரூ.24 கோடி மானியம் வழங்கப்படும்.

உயர்மதிப்புள்ள மரக்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கும் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு.

2023-03-21 05:19 GMT

மக்களிடையே சிறுதானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும்.

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு கருவிகள் விநியோகிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு.

அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்டங்களில் 14,500 ஹெக்டேரில் 725 தொகுப்புகள் உருவாக்கப்படும்.

சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.

2023-03-21 05:16 GMT

கம்பு, கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.

சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய விலையில் நிதி வழங்கப்படும்.

வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு உதவ ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு.

2023-03-21 05:13 GMT

ரூ.50 லட்சம் நிதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நெல் விதை உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.

சிறுபாசன கடைமடைகள் தூர்வாரப்பட்டு பாசன நீர் கடைமடை வரை செல்ல வழிவகை செய்யப்படும்.

விளைப் பொருட்களை உலர வைத்து சேமிக்க வசதியாக 253 உலர் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு களங்கள் கட்டப்படும்.

அங்கக வேளாண்மை ஊக்குவிக்க பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு.

2023-03-21 05:08 GMT

ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி ஒதுக்கீடு.

25 மாவட்டங்களில் முதல்வரின் சிறுதானிய இயக்கம் செயல்படுத்த ரூ.82 கோடி ஒதுக்கீடு.

மாற்று பயிர் சாகுபடிக்கு 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

2023-03-21 05:05 GMT

சிறு தானிய மண்டலங்களில், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

2504 கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு.

2023-03-21 05:01 GMT

விவசாயிகளுக்கு இலவசமாக 15 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.

127 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள குடும்பத்தினர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

2023-03-21 04:57 GMT

2021- 22ம் ஆண்டில் 185 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ஒரு லட்சம் மானியம் வழங்கப்பட்டது.

வேளாண் பட்டதாரிகள் மூலம் அக்ரி கிளினிக் ஏற்படுத்தப்பட்டு வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட்டன.

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 33 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

2023-03-21 04:54 GMT

பயிர் காப்பீடாக ரூ.1065 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால்தான் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த முடியும்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

2023-03-21 04:51 GMT

தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வண்ணம் உழவர் சந்தைகள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

டெல்டாவில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

Tags:    

Similar News