என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

லைவ் அப்டேட்ஸ்: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்
- பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
- சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
தமிழக சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 21-ந்தேதி வரை நடத்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
Live Updates
- 21 March 2023 12:06 PM IST
மண் வளம் குறித்து விவசாயிகள் அறிய அனைத்து விவரமும் கணினி மயமாக்கம்.
அனைத்து மாவட்ட விவசாயிகள் எண்ணிக்கை, சாகுபடி விவரம் மின்னணு முறையில் சேகரிப்பு.
- 21 March 2023 12:05 PM IST
23 லட்சம் மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை. இதற்காக ரூ.6,536 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு.
- 21 March 2023 12:01 PM IST
யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க தனி குழு அமைக்கப்படும்.
- 21 March 2023 11:58 AM IST
நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு பொது ரகத்திற்கு ரூ.75, சன்ன ரகத்திற்கு ரூ.100 கூடுதலாக வழங்கப்படும்.
25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை.
அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சிறுதானியங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை.
- 21 March 2023 11:52 AM IST
ரூ.14 ஆயிரம் கோடி கூட்டுறவு பயிர் கடன் வழங்கப்படும்.
காவிரி படுகை பெருந்திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.
காவிரி பாசன ஆறுகள், வடிகால்கள் ரூ.90 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்படும்.
- 21 March 2023 11:49 AM IST
சிவகங்கை கருப்பு கவுனி அரிசி புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.
ரூ.9 கோடி செலவில் 25 உழவர் சந்தைகள் மேம்படுத்த ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு.
உணவு பதப்படுத்தும் கொள்கை-2018 சீரமைக்கப்படும்.
பூச்சிகள் அருங்காட்சியகத்தை மேம்படுத்த 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
- 21 March 2023 11:45 AM IST
மா, கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச்செடி தொகுப்பு விநியோகத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு.
அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை உள்ளிட்ட 10 பொருட்கள் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.
சாத்தூர் வெள்ளரி, மதுரை செங்கருப்பு, விளாத்திக்குளம் மிளகாய் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.
கடலூர் கோட்டிமுறை கத்தரி, பேராவூரணி தென்னை, வீரமாங்குடி அச்சுவெல்லம் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.
- 21 March 2023 11:41 AM IST
பள்ளி மாணவர்களுக்கான பண்ணை சுற்றுலா திட்டத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
பண்ணை குடும்பங்களுக்கு பழச்செடி தொகுப்பு விநியோகம் செய்ய ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு.
ஈரோடு கீழ் பவானியில் ஒருங்கிணைந்த நுண்ணீர்பாசனத்திற்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு.
- 21 March 2023 11:38 AM IST
ரூ.130 கோடியில் தேனியில் வாழை உற்பத்தி திட்டம்.
விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும்.
உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்க தனி தொகுப்பு திட்டம் அறிமுகம்.
விளைச்சல் குறைந்துள்ள முந்திரி மரங்களை அகற்றி உயர் விளைச்சல் இரக செடிகளை 500 ஏக்கரில் நடவு செய்து புதுப்பிக்க நடவடிக்கை.
- 21 March 2023 11:32 AM IST
டிராகன், பேரீச்சை, ஆலிவ் போன்ற சிறப்பு பயிர்களின் பரப்பை விரிவாக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
சென்னை மாதவரம் தோட்டக்கலை பூங்கா ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
விவசாயிகளை வெளிநாடு அழைத்துச் செல்ல புதிய திட்டம்.
வேளாண் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகள் அயல்நாட்டில் பயிற்சி மேற்கொள்ள ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.






