என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

லைவ் அப்டேட்ஸ்: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்
- பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
- சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
தமிழக சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 21-ந்தேதி வரை நடத்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
Live Updates
- 21 March 2023 11:28 AM IST
பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்கால காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம் வழங்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு.
தண்ணீர் பற்றாக்குறை பகுதியில் நுண்ணீர் பாசன முறையை நிறுவுவதற்கு மானியம் வழங்க ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு.
சேலம் ஏற்காடு தாவரவியல் பூங்காவை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
- 21 March 2023 11:24 AM IST
ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க மிளகாய் மண்டலம் அறிவிப்பு.
தக்காளி மற்றும் வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க நடவடிக்கைக்கு ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு.
வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு.
தக்காளி ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு.
- 21 March 2023 11:22 AM IST
மல்லிகை பயிர் வேளாண் முறையை விவசாயிகளுக்கு கற்றுத் தர ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழகத்தின் 21 மாவட்டங்களில் பலா சாகுபடியை உயர்த்தும் திட்டத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் முருங்கை சாகுபடியை உயர்த்த ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு.
- 21 March 2023 11:17 AM IST
சேலம், அமராவதி சர்க்கரை ஆலை கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு.
நெல் ஜெயராமன் மரபு சார் நெல் ரகங்களை பாதுகாக்கும் திட்டத்திற்கு ரூ50 லட்சம் நிதி ஒதுக்கீடு.
3-4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம்.
கருவேப்பிலை சாகுபடியை 5 ஆண்டுகளில் 1,500 ஹெக்டேரில் செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு.
- 21 March 2023 11:13 AM IST
கோவையில் கருவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு.
கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திறகு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும்.
பருத்தி உற்பத்தியை 4 லட்சத்து 50 ஆயிரம் டன்னாக உயர்த்த நடவடிக்கை.
- 21 March 2023 11:09 AM IST
மாடு, ஆடு, தேனி வளர்ப்பு பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள ரூ.50 கோடி நிதியுதவி மற்றும் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு.
ஒருங்கிணைந்த பண்ணையம் மேற்கொள்ள வட்டியில்லா கடன் உதவி வழங்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
- 21 March 2023 11:07 AM IST
மின்னணு வேளாண்மை திட்டம்- விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் இடுபொருட்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை.
புரத சத்து வழங்கும் பயறு வகைகளின் பரப்பளவு, உற்பத்தியை அதிகரிக்க ரூ.30 கோடியில் பயறு பெருக்குத் திட்டம்.
- 21 March 2023 11:04 AM IST
தமிழகத்தில் தென்னை வளர்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
33 கோடி நிதி ஒதுக்கீட்டில் சூரிய காந்தி, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம்.
எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு மண்டலம்.
தென்னை உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- 21 March 2023 11:00 AM IST
விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவித்த வாட்ஸ் அப் குழு.
பருவத்திற்கேற்ற பயிர், தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர ரூ.205 கோடியில் கிராம வேளாண் முன்னேற்ற குழு.
எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.33 கோடியில் சிறப்பு திட்டம்.
- 21 March 2023 10:56 AM IST
கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைப்பதற்கு நிதி ரூ.2.5 கோடி ஒதுக்கீடு.
100 உழவர் குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரிக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
ஆதிதிராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு.






