தமிழ்நாடு செய்திகள்

இளைஞரை ஆபாசமாக திட்டிய விவகாரம்: திமுக முன்னாள் நிர்வாகியை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா

Published On 2023-01-30 22:28 IST   |   Update On 2023-01-30 22:28:00 IST
  • பாதிக்கப்பட்ட இளைஞர், சேலம் இரும்பாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
  • திருமலைகிரி கிராமத்தை சேர்ந்த மக்கள் காவல் நிலையம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர்.

சேலம்:

சேலம் திருமலைகிரி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு செந்தமான மாரியம்மன் கோவிலில், பட்டியலினத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் குடிபோதையில் நுழைந்ததாக கூறி, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவர் ஊர் மக்கள் முன்னிலையில் ஆபாசமாக திட்டினார். இது தொடர்பான வீடியோ பரவிய நிலையில் அவரது செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை கழகம் நடவடிக்கை எடுத்தது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட நபர், சேலம் இரும்பாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மாணிக்கத்தை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது, திருமலைகிரி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல் நிலையம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர். மாணிக்கத்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லவிடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர். கைது நடவடிக்கை எடுக்கக்கூடது என வலியுறுத்தினர். சிலர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் மாணிக்கத்தை காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News